.

Sunday, 26 January 2014

பயணத்தின் முடிவு -- பொன்.காந்தன்


ஏதேதோ ஏக்கங்கள்
நின்று நிதானித்து
ஆறுதலாய் தீர்வு காண்பதற்கிடையில்
புதிய ஏக்கங்களும்
விரும்பாவிட்டாலும் பற்றிக்கொள்கின்றது.

பத்தினி --பொன்.காந்தன்


உன்னை பிரிந்திருக்கும்
இந்தநாட்களில்
ஒவ்வொரு வசந்தமும்
கடந்துபோகும் போது

பனிக்குருவி-பொன்.காந்தன்



பனிக்குருவி பனிக்குருவி
பனிக்காட்டு சேதியென்ன
பனங்காடு நினைவில் வர
பசி மறந்து போனாயோ

பஞ்சமம் - பொன்.காந்தன்



ராகங்கள் தெரிய வந்தபோது
பரபரப்பும் பதட்டமும்.
கச்சேரிகள் களைகட்ட
தனி ஆவர்த்தனங்களில்
மந்தைவெளி இழந்திருக்கும்
ஓர் சுதந்திரப்பாடகனை.

குயில்களுக்கு தெரியாது
தாம் பஞ்சமத்தில்பாடுவது
என்றும் ஒரே கூவல்
ஒரே இனிமை
எல்லோரும் கேட்கிறார்கள்.
பஞ்சமத்தை குயில் அறியும்வரை
குயில்பாட்டு தெவிட்டாது.

பக்தி- பொன்.காந்தன்


என்னிடம்
இரண்டு கரங்கள் இருக்கின்றது
மதுரை மீனாட்சிக்கும்

நம மரத்தடி வைரவருக்குமாக....

அவஸ்தை-பொன்.காந்தன்



இப்போதெல்லாம்
திருவிழாவுக்கு போவதை தவிர்த்துக்கொள்கிறேன்.
அவளின் வயதில்தோழிகளொடு
சுற்றிவரும் அழகிகளால்
நான் மிகவும் தனிமையை உணர நிர்ப்பந்தமாகிறேன்.
எப்பொழுதும் இன்றைய திருவிழாக்கள்
ஒரு அழகி இல்லாமல்
அவஸ்த்தைபடுவதை பார்க்கின்றேன்.
மணிக்கடையிலும்
தீர்த்தக்கேணியிலும்
வடக்கு வீதி மரத்தடிகளிலும்
நான் அழுவதற்கென்றே ஆயிரம் நினைவுகளை
விட்டுச்சென்றிருக்கிறாள்.
இப்போதெல்லாம் அநேகம்பேர்
திருவிழாக்களை தவிர்க்கின்றார்கள்

கடவுளின் மீதும் கோபம்தான்.

மாமாவின் பதில்கள்--பொன்.காந்தன்


அவன் இப்போது
பள்ளி செல்லத்தொடங்கிவிட்டான்.
மாமா எங்கே என்று கேட்பான்
இறந்துவிட்டார் என்பேன்.
எங்கே புதைத்தீர்கள்
என்று கேட்பான்
இடத்தை சொல்வேன்.
காட்டுங்கள் என்பான்
கல்லறை உடைக்கபட்டுவிட்டது என்பேன்.
யாரால்என்று கேட்பான்
சொல்லித்தானே ஆகவேண்டும்.
காட்டுங்கள் என்பான்
காட்டித்தானே ஆகவேண்டும்.
ஏன் எதற்கு எப்படி இது நடந்தது
ஆயிரம் கேள்விகள் அவனுக்குள் எழும்.
நான் சொல்லித்தானே ஆகவேண்டும்
நான் என்ன செய்ய.
ஒன்று அவனுக்கு நான்
தெளிவாக சொல்வேன்
‘‘கல்லறையை   மனிதர்கள்

உடைப்பதில்லைஎன்று

அந்த இடம்--பொன்.காந்தன்


அந்த மனிதரை காணவில்லை
அவருக்கான அழைப்பு
எல்லோரிடமும் இருப்பதாக  உணர்கிறேன்.
அவர் இங்கே
அடுத்த கணமே வேண்டப்படுகிறார்.
என் மீது சுமத்தப்படும்
எல்லா இம்சைகளின்போதும்
நான் அம்மனிதரை தேடுகிறேன்.
அவரிருந்த இடம்
எவருக்குமில்லாமல் இருக்கின்றது.
அநேகம்பேர்
அநேக சந்தர்ப்பங்களில்
அவரை தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.






அவளின் இரவு--பொன்.காந்தன்




முந்தநாள் இரவும்
அவள் முதலிரவுப்பெண்போலஇருந்தாள்.
மூன்று பிள்ளைகள் பெற்றாயிற்று.
மூத்தவள் கூட
இன்னும் ஓரிரண்டு வயதில் பருவப்பெண்.
பதினைந்து வருடங்கள் ஆயிற்று
நம் இல்லற வாழ்க்கைக்கு.

அவளும் நானும் சண்டைகள் பிடித்ததுண்டு
எப்பொழுது எப்படி
 சமரசம் செய்துகொண்டோமென்று தெரியவில்லை.
முப்பது பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் அளவில்
அவளுக்கும் எனக்குமிடையில்
நமது இதயமிருந்தது.
அவளை முழுமையாக நினைக்கின்ற
இரவுகளில் ஒன்று இது.
இப்போதுதான் நம்
நான்காவது பிள்ளைக்காக
அவளை பிரவசவிடுதியில்

அனுமதித்துவிட்டு வந்திருக்கின்றேன்.
Ş