.

Saturday, 8 November 2014

உன் இரக்கமற்ற பாடலில் இருந்து....பொன்-காந்தன்









முதல் விழி திறந்த
பசுந்தளிரை
மறு முறை இமை திறக்க
உம் மலட்டு துப்பாக்கி விட்டுவைக்கவில்லை.
இப்போது நீ விருந்துக்கு அழைக்கும்போதெல்லாம்
குழந்தை கறி பரிமாறிவிடுவாயோயென்ற அச்சமதிகமெனக்கு.
எங்காவதுஒரு கணத்திலேனும்
உன் முகத்தில்
இரக்கத்தை தேடிப்பார்க்கின்றேன்.
இல்லை
தயவு செய்து
பாலும்குருதியும் மண்ணும்
அம்மாவின் சித்தப்பிரமையும் கலந்த
அந்த மரணத்தின் பேரால் சொல்கிறேன்
என்னை விட்டுவிடு.

No comments:

Post a Comment

Ş