.

Friday, 6 December 2013

தோடுடைய செவியனுக்கு - 2013தை-கார்த்திகைவரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை






தந்தையை காணாமல்

தவிக்கிறான் பிள்ளை.

எங்கே அந்த உமாதேவியார்

கொன்றவனை சுட்டியும்

நுாறு பதிகம் பாடிவிட்டான் குழந்தை

இறங்கவில்லையே இடப வாகனம்

தோடுடைய செவியனை பாடிப்பாடி

படைத்துக் களைத்து விட்டோம்

கனவிலும் வரவில்லை கயிலை நாதர்

ஆயுள்முடிந்த ஆண்டவருக்கா

நாம் காவடியெடுத்து கரைகின்றோம்

இது ஒன்றும் கடவுளை நிந்திக்கும்

கவிதையல்ல

ஆதியும் அந்தமுமில்லா

அருப்பெரும்சோதியரை

சோதிக்கும்காலம்

நம் குழந்தையை தடுத்தாட்கொள்ளும்

இடங்களை தவறவிட்டுள்ளாரா கடவுள்

முடிந்தால் இடபத்தில் எழுந்தருளட்டும்

எங்கள் அம்மையும் அப்பனும்

தவிக்கும் குழந்தைகளுக்கு

உண்மையை சொல்லட்டும்

தந்தையர் எங்கே?





2013தை-கார்த்திகைவரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை

 -பொன்.காந்தன்-  

No comments:

Post a Comment

Ş