.

Saturday, 7 November 2015

கனவின் வாசம் - பொன்.காந்தன்


கனவின் வாசம்













சாலை  விரிந்து கிடக்கிறது
காற்று
எஞ்சி கிடக்கிறது
கிளைகளிலும் வெளிகளிலும்.......
சிந்தப்படாத மாய புன்னகை
இன்னும்  உதடுகளில் ஒளிந்து கிடக்கிறது .
தொடாத வர்ணங்கள்
நதிகளும் மலைகளும் கானகமும் வானமும்
சந்திக்கும் இடத்தில் இருக்க கூடும்
இதயம் ஒன்றுக்குள் மூன்றாவது துடிப்பு
வாசல் வரை வந்து மௌனமாய் இருக்க கூடும்
ஒரு அழகிய புதிய நாள்
நாட் காட்டியின் கதவு மறைவில்
நாணியபடி நிற்க கூடும்
அவ்வளவு அவசரமாய்
எங்கு புறப்படுகிறாய் !!



Wednesday, 4 November 2015

கவிதை


-பொன்.காந்தன்-  




சொல்லாதது


வார்த்தைகள் இல்லை என்றான பிறகும்
எழுத வைப்பது எது
என்னை சும்மா விடு
உனக்கு என்ன வேண்டும்
விரும்பினால்
என்னை சிலுவையில் அறைந்துவிடு
எனக்காக கூட
மூச்சுவிட விரும்பாதிருக்கின்றேன்
எப்படி காத்திருந்தபோதும்
தொலைவிலும் தெரியவில்லை.
வெறுமனே கிடக்கிற
சாலைகளை தெரிகிறதா
அழுவதற்கு இடமில்லாத பூமியில்
முகத்தை எப்படி வைத்துக்கொள்வது
கடைசியாய் இருக்கும் முகவரியில்
ஏதேனும் சொல்வதற்கென்று வருகின்றவன்
எடுத்துச்செல்வதற்கென்று
என்னிடம் ஏதும் இருக்குமென நம்பவில்லை!!




Ş