.

Saturday, 8 November 2014

துரதிஸ்டம் --பொன்-காந்தன்









நங்கூரமிட முடியவில்லை
துறைகளில் வரவேற்க யாருமில்லை
எங்கோ கரைகளில்
ஒதுங்கின்றது நம் கண்ணீர்.
குமுதினிப்படகாய்
கிளாலிக்கடலின் இரவுப்பயணங்களாய்
இன்னமும் நம்துயர்
நவுறுதீவிலும் பப்புவாநியுகினியிலும்
ஒதுங்குகின்றது ஒரு சொட்டுசூரியனுடன்..
அகதியாய்
சொல்லக்கூடியது இப்போது எதுவாய் இருக்கிறது
இராமேசுவரத்தையும் கடந்துபோவதுதான்
சோழர்பரம்பரையின் துரதிஸ்டம் என்பதை தவிர...

No comments:

Post a Comment

Ş