இன்னுமேன் துப்பாக்கியோடு நிற்கிறாய்
என்னை சுடமுடியும் என்கிறாயா
இது சுடுவதற்கில்லை என்கிறாயா
இதனால்தான் சுட்டேன் என்கிறாயா
இப்போது சுட்டால்
உன்னை என்னை செய்ய முடியுமென்கிறாயா
இதுபோல் என்னிடம் ஏராளம் உண்டென்கிறாயா
துப்பாக்கியால் எல்லாமே செய்துவிடமுடியும் என்கிறாயா
என் கையில் இருந்தால் பயங்கரவாதியின் துப்பாக்கி
உன் கையில் இருந்தால் புனிதனின் துப்பாக்கியென்கிறாயா
என்னை துப்பாக்கியை தொடாதே என்று மிரட்டுகிறாயா
என் வாசலில் எத்தனை துப்பாக்கிகள்....
No comments:
Post a Comment