Wednesday, 4 November 2015
கவிதை
-பொன்.காந்தன்-
சொல்லாதது
வார்த்தைகள் இல்லை என்றான பிறகும்
எழுத வைப்பது எது
என்னை சும்மா விடு
உனக்கு என்ன வேண்டும்
விரும்பினால்
என்னை சிலுவையில் அறைந்துவிடு
எனக்காக கூட
மூச்சுவிட விரும்பாதிருக்கின்றேன்
எப்படி காத்திருந்தபோதும்
தொலைவிலும் தெரியவில்லை.
வெறுமனே கிடக்கிற
சாலைகளை தெரிகிறதா
அழுவதற்கு இடமில்லாத பூமியில்
முகத்தை எப்படி வைத்துக்கொள்வது
கடைசியாய் இருக்கும் முகவரியில்
ஏதேனும் சொல்வதற்கென்று வருகின்றவன்
எடுத்துச்செல்வதற்கென்று
என்னிடம் ஏதும் இருக்குமென நம்பவில்லை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment