பொன்.காந்தன்
யாருமற்ற நதிக்கரை
உனக்கும் எனக்குமான மணல் கரை
மான் கூட்டம் கானகம்
காத்திருந்து நின்றேன்
மணலின்
மௌனம் கலைத்தேன் .
மணலின் சிநேகிதம் ஆனேன் .
நதிக்கரையும்
மெல்ல சரிந்த மரங்களும்
என் மொழிகள் புரிந்தன
இறுதியில்
நான் மரங்களும் மான்களும் மணலுமானேன்
ஒரு நதிகரையாய்
மான் கூட்டமாய்
மணல் வெளியாய் காந்திருந்தேன்
ஏனோ
இன்னும் என் தோழி வாராது போனாய் !