நீ எங்கிருக்கிறாயென்று தெரிந்தும்
ஒழித்து பிடித்து விளையாடும்போது
அங்குமிங்கும் தேடுகின்றேன் உன்னை.
கல்லில் நீ தடுக்கிவிழுந்தபோது
உன் அழுகை முடியும்வரை
நோகாது என்றுதெரிந்தும்
கல்லுக்கு திட்டி அடிக்கின்றேன்.
வராது என்று தெரிந்தும்
நிலவை
திரும்பதிரும்ப அழைத்தேன்
நீ சோறுண்ணும்வரை.
உன் சிறு குறும்புகளை
குழப்படிகளை கட்டுக்குள் கொண்டுவர
இல்லாத பூச்சாண்டிகளை அழைக்கின்றேன்.
இப்போது
நீ இல்லையென்று தெரிந்தும்
உன்னை அழைக்கின்றேன்
என் வாழ்வு முடியும்வரை....
இப்போது
நான் எங்கு ஒழித்தாலும்
கண்டுபிடித்துவிடுகிறது உன் துயர்.
No comments:
Post a Comment