சில சந்தோசமான தருணங்களில்
நீ இல்லையேயென்று நினைக்கும்போது
கண்ணீரில் முடிந்துவிடுகின்றது புன்னகை.
திருமணவீட்டில்
மாப்பிள்ளை தோழனாக
தங்கைகளின் மாமனாக
தோழிகளின் கொண்டாட்டங்களில்
ப்ளீஸ் ஸ்மைலாக
கொம்பு வைப்பவனாக
நீ இல்லையேயென்று நினைக்கும்போது
கண்ணீரில் முடிகிறது
ஒவ்வொரு அழகான தருணங்களும்......
No comments:
Post a Comment