ஏதேதோ ஏக்கங்கள்
நின்று நிதானித்து
ஆறுதலாய் தீர்வு காண்பதற்கிடையில்
புதிய ஏக்கங்களும்
முண்டியடித்து ஏறுவது
நிர்ப்பந்தமானாலும்
சகஜமாகவும்
நாகரிகமாகவும் மாறிவிட்டது
அநேகமாக
எங்காவது ஓரிடத்தில்
எம்பிப்பறக்கின்ற ஆசுவாசம்
சேர்ந்துகொள்ளுமென
ஏதோ ஒரு அமானுஸ்யம்
பரபரப்பின் மீது உரசுவதாய்படுகின்றது.
No comments:
Post a Comment