பள்ளிநாட்களில் மட்டுமல்ல
இன்றளவும்
இத்தனை வயது கடந்த பின்பும்
ஏதோ ஒன்றின் முன்
பதில் தெரியாமல்
விழி பிதுங்கி நின்றேன்
தெரிந்து கொள்ளாமலும்
அப்பால் போகமுடிகிறது.
தெரிந்தும்
அப்படி என்ன
சாதித்து கிழித்துவிட்டோமென்கிறது மனசு
மழைக்காலத்தில்
ஒரு கப்பலாவது செய்து கொடுக்கிறோமா சிறுசுகளுக்கு...
No comments:
Post a Comment