உன்னை பிரிந்திருக்கும்
இந்த ஓரிரண்டு வருடத்துக்குள்
என் அம்மா
இருபது முப்பது வருடங்கள்
தியாகியாக வாழ்ந்திருப்பதை
என் வேதனையின் முட்கள்
விளங்கவைத்துள்ளன.
இந்த
ஓரிரண்டு வருடங்களில்
முன்னெப்போதையும் விட
அம்மாவின் மீதான பிரியமும் அதிகமாயிற்று...
No comments:
Post a Comment