கால் நுாற்றாண்டுக்கு பிறகு
நமூருக்கு
கொழும்பில் இருந்து இரயில் வருவதாக
ஆட்சிபீடத்தார்
பீற்றிக்கொண்டனர் பேரானந்தப்பட்டனர்.
நம்மூரார் பேசிக்கொண்டதோ
இனி இரயிலில் ஏறிப்போய்
காணாமல் போனவர்களை தேடலாம்
பூசாவிலும் மகசினிலும் உள்ள
தமிழ்கைதிகளை பார்க்க போகலாமென.....

No comments:
Post a Comment