.

Saturday, 8 November 2014

இரயிலின் வரவு ---பொன்-காந்தன்









இப்போதும்
எங்கள் ஊரின்மேல்
பயணிகள் விமானம் போனாலும்
எங்கள் சிறார்கள்
முற்றத்தில் இருந்து ஓடிவந்து
நடுங்கி ஒடுங்கிப்போய்
அம்மாவையோ அப்பாவையோ
அணைத்துக்கொள்கிறார்கள்.

இப்போது நம்மூருக்கு
இருபத்தைந்து ஆண்டுகளின் பின்
முதல் இரயில் வருகின்றது
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
சொல்லாமல் போய்
சிறுவர்கள்இரயில் பார்த்து மகிழ்கிறார்கள்.

என்ன சொல்ல
ஏதோ சொல்லாமல் விட்டுவிடுகிறேனா
! யாழ் தேவி
என் சிறுவர்களுக்கு நான் ஏதும் சொல்லவில்லை
நீ வரும் போது
நான் மிக தொலைவிலிருந்தேன்
உனக்கு தெரியும் உண்மை.

No comments:

Post a Comment

Ş