அடிவானத்தைப்போல இருக்கும் பக்கத்தில்
கடவுளின் சொரூபம்
இருப்பது போன்ற ஒரு மூலையில்
கருக்கலை போல மை நிரம்பியிருக்கும்
உனது பேனா நுனியில்
ஒரு சடுதியான மகரந்த சேர்க்கையில்
மலரும் முடிவில்
நீ
வானத்துக்கும் பூமிக்குமான
நெடுமரம்போல நின்று
கிறுக்கிவிடும் கையெழுத்தில்
இருள்கலையும்
பறவைகள் வானம் நிரம்பி வழியும்
மலர்கள் முகங்களாகும்
வார்த்தைக்கு வார்த்தை நறுமணமிருக்கும்
உன்னையே சுற்றிவரும்
எல்லா வர்ணபூனைக்குட்டிகளும்
இது உனக்கு தெரியுமா!

No comments:
Post a Comment