.

Saturday, 8 November 2014

இரண்டாவது காலம் --பொன்-காந்தன்









இது இரண்டாவது காலம்
மேன்மை தங்கிய பிரபு
தென்கோடிவழியே வருகிறார்
பராக்! பராக்!! பராக்!!!
நண்பனை பகைத்துக்கொண்டதாக
கற்சிலைமடுமேல்
கண்ணீர் சிந்துகிறார் மலர்வளையம் வைக்கின்றார்.
பிரபுநட்ட கல்
ஒட்டுசுட்டானுக்கும் காலிக்கும்
ஹம்பாந்தோட்டைக்கும் சேர்த்துத்தான்
பிறகு ஏன் காலியும் ஒட்டுசுட்டானும்
கட்டிபுரண்டுகாயப்பட்டு செத்துக்கொண்டதேன் எப்படி!
முன்பொருகால்
மகாபிரபு
இங்கிருந்து இறப்பர் எடுத்துப்போனார்
அங்கிருந்து திரித்து அனுப்பினார் இரயர் வேறுவேறு.....
இப்போதும்
எடுத்துப்போகவருகிறார்
இது இரண்டாவது காலம்
நாம் வெட்டிக்கொண்டோம் வீழ்ந்துபட்டோம்
வன்மம் கொப்பளிக்க.
வரலாறு மறந்தோம்
வரலாறு மறக்கும் தந்திரம் கண்டோமா?
எலும்புகளை கொடுக்கவும் மறைக்கவும்
மூச்சுப்பிடித்து முட்டிக்கொள்கிறோம்.
முன்பு கறுவா இப்பொழுது எம் எலும்புகள்
நண்பர்களே!
நாம் தமிழர் மூன்றாயும்
நீங்கள் சிங்களவர் பதின்மூன்றாயும் இருக்கும்வரை
நாங்கள் அடிமைகள்
நீங்கள் சுதந்திரம் அற்றவர்கள்
மகாபிரபு நம்மை
அங்கங்கு வைத்து
எங்கெங்கோ இருந்தும் ஆழ்வார்.

No comments:

Post a Comment

Ş