.

Saturday, 8 November 2014

இலட்சம் கடவுள் ---பொன்-காந்தன்









முட்டிவெடித்துவிடும்போல்
தேங்கி நின்ற அழுகையை
கொண்டோடித்திரிந்தேன்.
அழும் இடங்களிலெல்லாம்.
அனுமதி இல்லையென்ற
அறிவிப்புப்பலகை
இறுதியாய்
என்னைப்போல
மெலிந்த தோற்றமும்
தாடியும் குலைந்த தலையும்
குருதிபடிந்த மேனியும்
சிலுவையுமாய்  இருந்த இயேசுபிரானின் முன்
என் எல்லா அழுகையையும் அழுதேன்.
முன்பொரு காலம் அவரும்
ஒரு பயங்கரவாதியாய்
சமுகவிரோதியாய் பிரகடனம் செய்யப்பட்டதை
நான் நன்கறிவேன்.
நான் பெற்ற ஞானத்தில்
இங்கும் என்றோ ஒரு நாள்
இலட்சம் கடவுளருடன்
என் நிலம் ஒரு கோவிலாய் சுடருமென்பேன்.

No comments:

Post a Comment

Ş