.

Saturday, 8 November 2014

எதுவரை ---பொன்-காந்தன்







எப்போதோ
நீ பார்த்த பார்வையில்தான்
இன்றுவரை
பாய்கின்றது இந்த நதி.
இடையில்
அத்திபூத்தாற்போல
ஆயிரம் பார்வைகள் உரசினாலும்
உற்பவம் என்னவோ
உன் பார்வையில்தான்.
அப்படியென்ன
உன் கண்ணில்  குழைத்து
என் நெஞ்சில் பூசினாய்.

வேறுகிளைகள் விட்டு
வேர்கள் தடவி
நுாறு சங்கமமானாலும்
ஒட்டியிருக்கின்றது ஒரு மூலையில்
ஊற்றெடுப்பு உன் விழியென.
காற்றின்றி நான் கட்டையிலேறும்போதும்
கலைந்தபடி இருக்கும் உன் கூந்தலென் நெஞ்சில்.
சுவடுகள் அழியாதஉன் செம்பாதங்கள்
இதுவரை வருகின்றது என் நெஞ்சில்.
எதுவரைசொல் நம் தீராக்காதல்..

No comments:

Post a Comment

Ş