நீ சாலையோரம்
உச்சரித்துச்சென்ற பாடலை
மீண்டும் நான் கேட்க ஆசைப்படுகிறேன்.
நானும் புதிதாய் இருந்தேன்
அதுவும் புதிதாய் இருந்தது.
யாரும்சாலையில் இல்லாத பொழுதில்
நீ பாடிய பாடல் யாருக்கானது
இன்னும் சில தோழிகளிடம்
இக்கதையை சொல்லிவிட்டேன்
ஏன் சொன்னேன்
உன் பாடல் இதுவரை
உன்னிடமே இருந்ததா!
உன் வரவின்போது
என் வாசல்கள் எல்லாம்
திறந்தே இருந்ததா
முழுதாய் உன் பாடல் நிறைந்திருக்கிறதே!
நீ சாலையோரம் உச்சரித்துச்சென்ற பாடலை
மீண்டும் கேட்க ஆசைப்படுகிறேன்.
No comments:
Post a Comment