ஏழையின் காலடியில்
எவருமில்லைஎன்றும்
எப்படித்தான் வருகின்றது
இரவுபகல் இன்றும்
ஏழைகளால் நுாறுபயன்
ஏறிப்பார் மலைமேலே
இன்னும்தான் விடியலிலை
எட்டிப்பார் லயன்மீதும்
தேனீர்தான் தித்திக்கும்
உச்சிமலை கைக்கொழுந்தால்
ஆனாலும் கண்ணீரும்
மலைச்சாரல் எத்திக்கும்
தேயிலை பச்சையிலே
தேமதுரப்பாட்டுவரும்
உயிலை கேட்டால்தான்
உண்மைபல புரியவரும்
மயிலைபோலேதான்
மலைதுாரத் தெரியும்
கயிலைமேலிருந்தும்
கண்ணீர்தான் விரியும்
அவள்தொட்ட கொழுந்து
எங்கெங்கோ இனிக்கும்
எலிசெபத்ராணிக்கும்
வரும் சோம்பல் தணிக்கும்
மலைராணி இவளை
மலைத்தோட்டமறியும்
மாறாதஇவள் வாழ்வை
எவர் கோட்டை புரியும்
எப்போது தேயிலை
எடுத்துவரும் குயிலை
அப்போது கலைத்துவிடும்
மலையெங்கும் துயிலை
ஏழையில்காலடியில்
எவருமில்லைஎன்றும்
எப்படித்தான் வருகின்றது
இரவு பகலின்றும்


No comments:
Post a Comment