.

Saturday, 8 November 2014

பால்வெளி -----பொன்-காந்தன்








அது ஒரு சுகமான பால்வெளி
எப்போதாவது இது
எல்லோருக்கும் இருந்திருக்கும்.
உருவமற்றுகிடக்கும்சில உண்மைகளை
இன்னும் சுமந்தபடி திரிவதால்தான்
எங்களில் பலபேருக்கு
பல்லி போல மூலையில் ஒட்டியிருக்கின்றது
கொஞ்சப்புன்னகை.
பாவம் நீ
என்னையே நீ நினைத்துக்கொண்டிருந்தாலும்
நான் உன்னையே நினைத்துக்கொண்டிருந்தாலும்
சமாந்தரத்தில் போகும் இரவு இரயிலின் ஓசை
கனவு கலைத்தெழுதும் சில உண்மைகளை.

No comments:

Post a Comment

Ş