.

Thursday, 6 November 2014

நானும் நானும் -பொன்-காந்தன்






வானத்தில்இருந்து
கயிறறுந்து விழுவதுபோல
சாக்கடையில் கிடந்து நெளிவதுபோல
நான் உன் முன் இருக்கின்றேன்.
உன் முன் என் வாழ்க்கை இல்லை.
நீ வந்ததடங்களோ இல்லாமல்
நான் உலவ நினைக்கின்றேன்.
இடி மின்னல் புயல் சூறாவளி எரிமலையாய்கூட
என் இயற்கையில் நீ இல்லை
வெறு வெளியாய்கூட....
எப்படி நான் முன் இருக்கின்றேன்.
இதுவரை இருக்கும் பேய் பிசாசு பில்லி சூனியம்
இதைவிட வேறும் பெரிதாக இருந்தால்
அது வந்தும் என்னை காவிச்சென்று
என் பாட்டில் விடட்டும்.
அழகிய வாழ்வொன்றுக்கு
நான் தயாராகிவிட்டேன் நானும் நானுமாய்.

No comments:

Post a Comment

Ş