செத்துவிடவில்லைசெல்லம்மா புருசன்
பத்து தலையர்போல்பலங்கொண்டு வந்தான்
இத்துவிடவில்லை அவர் தந்த உச்சம்
இளவல் எனக்கிங்கு ஏறுமா அச்சம்.
முண்டாசு தலையர் போல்முறுக்கேறி நின்றேன்
மூச்சு நின்றாலும் தமிழாலே உதைப்பேன்
வண்டாகி தேனாகி வழியவும் கதைப்பேன்
வானரம் வந்தாலோ வதம் செய்து முடிப்பேன்.
மண் சாதிப்பாட்டை மதிக்காது போனால்
பெண் சாதி கூட பிரியட்டும் போபோ
என் சாதி தமிழர் இழிவுற்றுப்போக
இதயத்தில் இன்பத் தேன் வந்து விழுமா.
பின்வந்தாரெல்லாம் பேரின்பகடலில்
முன்வந்த நீயோநாய் போலத் தெருவில்
புண் தந்த நோயை வைத்துளாய் அருகில்
பூக்குமா உன் வாழ்வில் விடியல்தான் விரைவில்.
மற்றவர் மடிய மகுடிகள் ஊதி
உத்தமராகும் ஊழ்வினையெதற்கு
சித்தங்கள் சிறகுகள் விரித்து
முத்தமிழ் மகிழ முழுமையாய் வா
வேண்டாக்கதிரை விருப்புகொண்டு
மாண்டார் கனவை மாய்த்து நின்றாய்
நான்காம் தமிழை நாட்டியிங்கு
வேண்டாபுரளி வீசுகிறாய்.
உன்னை நோக்கி விரலை நீட்டு
நீ தான் எதிரி நெஞ்சில் தீட்டு
உண்மைதன்னை எடுத்துக்காட்டு
உலகம் வியக்க தேரை ஓட்டு
என்னை அறிய அன்னை தமிழ்
தமிழே எங்கள் முன்னை புகழ்
திண்ணை வரையும் தீராத்தமிழ்
தமிழாய் இருந்து என்றும் மகிழ்.
No comments:
Post a Comment