நீ அமைத்த மாளிகையில்
என் குழந்தை இல்லை
நீ அமைத்த பூங்காவில்
என் காதலி இல்லை
நீ விரித்த தெருக்களில்
என் வடைக்காரனும் வண்டிலும் இல்லை
நீ காட்டும் அழகர்களில்
என் கணவன் இல்லை
நீ அமைத்தஇராச்சியத்தில்
நான் இல்லை
இன்னமும் நான் நந்திக்கடல் மணலில்
ஒரு புளுவாய் துடித்துக்கொண்டிருக்கின்றேன்.
நீ அற்ற முள்ளாயினும் அதில்
நிச்சயம் நான் வாழ்வேன்.
No comments:
Post a Comment