பொம்மைகளோடுறங்கும் குழந்தைகளுக்கு
எதுவும் தெரியாது.
அலைந்துகொண்டிருக்கும்
அந்த விழிகளுக்கு
எல்லா தேசிய கொடிகளிலும்
வர்ணங்கள்மட்டுமே விருப்புக்குரியவை.
ஒலிவ் கிளைகளை
தாமரையை புறாவை சிங்கத்தை கழுகை
அவை ரசிக்கின்றன.
யாரெறிந்தாலும்
குண்டுச்சத்தங்களுக்கு திடுக்குறுகின்றன.
அம்மாவை இறுக அணைத்துக்கொள்கின்றன.
குழந்தைகளின் விழிகளில்
அமெரிக்கனும் சீனனும் ரஸ்யனும்அரபுக்காரனும்
சித்தப்பாவோ மாமாவோ அங்கிளோதான்....
நேற்று யாரோ குழந்தைகளை கொன்றானாம்.
இழுத்து வாருங்கள்அவனை
பூமியை தண்டாயுதமாக்கி
வானம் வரை ஓங்கி
அம்புலிமாமாவின் சாபமெடுத்து
அவன் தலையில் அடியுங்கள்
நாளைய இளவரசர்கள் எமக்கு வேண்டும்.
No comments:
Post a Comment