.

Thursday, 6 November 2014

நீ -மழை-நான்-பொன்-காந்தன்






இங்கே இப்போது
இந்த ஒதுங்கும் இடத்தில்
இந்த மழைப்பொழுதில்
நீ என்னோடிருந்திருந்தால்
வானத்தின் கவிதைகளில்
நனையும் மனிதனாகியிருப்பேன்.
துரதிஸ்டம்
எல்லா மழை நாட்களிலும்
அங்கே அப்போது
ஏதாவது காவலரணில் விறைத்தபடி
இனங்களுக்கான இடைவெளியில்
என்னை ஏங்க வைத்திருந்தாய்.
நாளை
எங்கோ எந்த மழை நாட்களிலும்
எனது மாடங்களின் சாரலில்
நான் தனித்து வெறித்தபடி நின்றாலும்
நீ வரப்போதில்லைதான்.
இனங்களுக்கு இடையிலான வன்மம்
உன் பாதம் பட்ட மண்ணையும்
தீராமல் சப்பித்தின்றதை நான் கண்டேன்.
மழை இப்போது உன்னையும் என்னையும்
பிரித்து வைத்தே கவிதை பழக்கப்பட்டிற்று.

No comments:

Post a Comment

Ş