இருளுக்குள் வரும் காலடி ஓசையும்
குப்பி விளக்கில் தெரியும் அவன் முகமும்
அம்மாவைப்பேரானந்தப்படுத்தின.
மகனின் காலடிஓசையும் முகமும்தான்
அம்மாவின் பேரொளி.
இப்போதுயார் வந்தால் என்ன
யார் போனால் என்ன
எதைக்கட்டினால் என்ன
எதை திறந்தால் என்ன
அம்மா காத்திருப்பது
அந்த காலடி ஓசைக்கே!
No comments:
Post a Comment