.

Saturday, 8 November 2014

தாய் ---பொன்-காந்தன்


















   
முன்பு நான்
பூக்கடைக்கு போகும்போதும்
கவனம் கவனமென்று
நுாறுகவனம் சொல்ல தாயிருந்தாள்.
இன்று
போர்க்களம் போகிறேன்
தாயிருந்த இடத்தை
கவனம் கவனம் கவனமென்று
ஆயிரம் கவனம் சொல்லி
நான் போகிறேன்.


No comments:

Post a Comment

Ş