.

Saturday, 8 November 2014

தங்கச்சியின்பிறப்பு -பொன்-காந்தன்






தங்கச்சி மன்னித்துக்கொள்
காமவெறியர்களிடமிருந்து
உன்னை காப்பாற்ற முடியவில்லை
எனது இயலாமையின் பேராலும்
வாழ்ந்து முடிக்காத  வலியாலும்
உனக்கு மறுபிறப்புண்டு
பிறந்துவா
உன்னில் கனன்ற நெருப்புடையவராய்
கோடி அண்ணன்களோடு பிறப்பாய்
உனது வீட்டு சுவர்களாகவும்
வேலிகள் முற்றமாகவும்
அண்ணன்கள் இருப்பார்கள்
நீ பறக்க நினைத்த எல்லையை தொடு
சாலைகளாகவும்
கல்லுாரிகளாகவும்
திருவிழாக்களாகவும்
அண்ணன்களே இருப்பார்கள்
வாழ்ந்து முடிக்காத வாழ்க்கையை
வாழ்ந்துவிடு தங்கச்சி

No comments:

Post a Comment

Ş