பரமேஸ்
பனம் பழத்தை சூப்ப கண்ட நாள் முதல்
எனக்கு பனம் பழத்தின்மேல் ஆசை வந்தது.
பரமேஸ் சூப்பிய விதமும்
அவள் கண்ணும் வாயும் பட்டபாடும்
அது ஏதோ
சொர்க்கத்தில் இருந்து விழுந்த பழம் போலவே இருந்தது
பரமேசைக் கண்டு கனகாலமாயிற்று
என்னவானாள் தெரியவில்லை
ஆயினும்
பனம் பழமோ
எனக்கு இப்போதும்
சொர்க்கத்தில் இருந்தே விழுகின்றது.
No comments:
Post a Comment