புதிய சாலை திறப்பு விழா
நல்லது
இது இனந்தெரியாதவர்களும்
வழமை போல் வந்து போவதற்கா
கடத்தல்காரர்களின் வாசலில்
இந்த சாலை சென்று முடியுமா
காணாமல் போனவர்களை
கண்ணீருடன் தேடித்திரிவதற்கா
எதற்கு இச்சாலை
இப்புதிய சாலையில்
தண்ணீர் கேட்டுபோராடலாமா
வெற்றுதோட்டாக்கள்
எப்போதாவது எஞ்சி இருக்குமா
இரத்தம்படிந்த சோடிக்காலணிகள்
ஆங்காங்கு சிதறிகிடக்குமா
நாய்கள்
வெருண்டோடி இச்சாலையில் குரைக்குமா
ஏகப்பட்ட கேள்விகளொடு
பழைய சாலையின் நாட்கள்
இதில்அடி எடுத்து வைக்க யோசிக்கின்றன!
No comments:
Post a Comment