.

Saturday, 8 November 2014

கடைசி மனிதன் - பொன்-காந்தன்







மலர்களால் சிலவேளை
மார்பையும் மர்மத்தையும்மறைத்துக்கொள்கிறாய்.
மலைச்சாரலிலோ நதிக்ரைகளிலோ
மரங்களின் கீழோ  அணைத்தபடி
காதல் பகிர்கிறாய்.
மலர் கொடுத்து வரவேற்கிறாய்
திராட்சைகளை மரத்தின்கீழும் உண்கிறாய்.
மரங்களில் இதயம் வரைந்து பெயரிடுகின்றாய்.
ஆதியை நீ நினைவுபடுத்தும் யாவும் அற்புதம்
வேட்டையை தவிர.....

No comments:

Post a Comment

Ş