.

Saturday, 8 November 2014

காற்றும் நானும் ---பொன்-காந்தன்







காற்று வருகின்றது போகிறது
ஒவ்வொரு மூச்சையும் உச்சரிக்கின்றேன்.
மூச்சின் முகவரிக்குத்தான்
என் காற்றின் எல்லா கவிதைகளும்
காற்றுக்கு  மட்டுமே தெரியும்
என் கடைசி வரி
எல்லாவேளையிலும்
காற்று என்னோடேயே இருக்கின்றது
அது இல்லாவேளை
நான் உங்களுடன் இல்லாவேளை

காற்று இதயத்தொடு புகுந்து
இதயத்தொடு போகும்வேளை
கவிதை வருகின்றது
காற்று ஒன்றேதான்
நாம்தான் இரண்டு மூன்று
காற்றுக்கு நிறமில்லை
நாம்தான் வெள்ளை கறுப்பு
காற்றுக்கு இஸங்கள் இல்லை
நாமோ பாசிசம் சோசலிசம் றேஸிசம்

காற்று
கைகளை விரித்து கும்பிடவேண்டிய கடவுள்
காற்று என்னோடேயே இருக்கின்றது
அது இல்லா வேளை
நான் உங்களிடம் இல்லாவேளை.....

No comments:

Post a Comment

Ş