இறுதியாய் எல்லாம்
வேறுவேறு இடங்களில் இருந்தன.
ஏமாற்றபட்டுவிட்டீர்.
அங்கு ஒரு கட்டளை பிறப்பிக்கபட்டது
நீங்கள் நலிந்தவர்களாக இருந்தபோது.
கவனம் சோதரர்களே
நீங்கள்
எல்லாவற்றிலும் ஒன்றொன்று
பறவைகளும்
கனி மரங்களும் போல.....
உங்களுடைய வானத்தையும்
சூரியனையும் பூக்களையும்
முதல்வார்த்தைகளையும்
அறிவிக்கப்போகிறர்வர்கள் நீங்கள்
எந்தக்கனியை
நீங்கள் உண்ணப்போகிறீர்கள் என்பதை
எங்காவது ஒரு சாத்தான்
பார்க்காமலா இருக்கப்போகின்றது
நோவாவின் பேழைக்குள்ளும்
எஞ்சி இருக்கின்றது
கொஞ்ச ஊழி சோதரர்களே!
No comments:
Post a Comment