.

Monday, 26 May 2014

சூரியனை எழுதுதல்








பொன்-காந்தன்




ஒருவன் தொலந்து கிடக்கின்றான்
எல்லோரும் நினைக்கும் இடத்தில்.
அவனுக்காய் உதிரக்கூடிய கண்ணீரையும்
அவன் கொண்டே போனான்.
அப்படியொருவனின் வாழ்வை
எப்போதாவது வாழ்ந்து முடித்திருக்ககூடும்.
ஆயிரம் கயிறுகளால் கட்டி
கோடி முடிச்சுக்கள் இட்டு
தானே அவிழ்த்துப்போன தடத்தை
சும்மா
ஊதி அழித்துவிட நம்புவதாக
சூரியன் இதுவரை  தடங்ளை விட்டுச்சென்றதில்லை.
இன்னும் கோடி இதிகாசங்களுக்காய்
ஒருவன் தொலைந்துகிடக்கின்றான்
எல்லோரும் நினைக்கும் இடத்தில்.
இனி நம்பும்படியாய்  சரிதம் படைக்கலாம்
இம்முறையேனும்
அவன் தோற்றப்பொலிவில்
பூநுால்களையோ
சிலுவைகளையோ குல்லாக்களையோ
பொருத்தாமல் பார்த்துக்கொள்வோம்.
மனித இனம் ஒருவனை தேடுகிறதல்லவா

No comments:

Post a Comment

Ş