பொன்-காந்தன்
ஒருமரமாக
உன் முன் இருந்து
எதை பேச முடியும்.
எதிலும்உயிரற்று
பிணங்கிப்போயிருக்கின்றோம்.
நீயாக
உன் முன் நான் அமரமுடியாது.
நான் உயிர்க்கும் இடங்களில் இருந்து
பேச்சை தொடங்கலாம்.
உண்மையாக
ஒரு புன்னகை தொடங்குமிடம்
இதுவாய் இருக்க முடியாது.
உலவவிடு ஓரிடம் காண
நான் கனவிலிருக்கின்றேன்.
நான் புரிந்து கொள்கின்ற இடத்தில்
நீ இல்லை
நீ போய் புதிய இடத்திலிருந்து வா
நாம் பேசலாம்
நாம் பேச வேண்டியவர்கள்தான்
நாம் பேசினால்தான்
இவ்விடம் அழகு பெறும்
பேசலாம்
நான் ஒரு பறவையோடு பேசுகிறேனென
நீ விசாலமாய் இருக்கும்போது.
No comments:
Post a Comment