இது தாய் தன் குழந்தைகளை மறைக்கின்ற காலமாயிற்று
அவளாஇவள்
ஏன் இப்படியாயிற்று.
குழந்கைளின் பேரால் அன்னையர் இழுத்துச்செல்லப்படுகிறார்களாம்.
ஏன் பெற்றாய் எப்படி வளர்த்தாய் என்னபெயர் வைத்தாய்
எப்படி போனார்கள்
எங்கெங்கு இருந்தார்கள்
வருவார்களா வரமாட்டார்களா
வந்தால் அணைப்பாயா அழுவாயா
ஏரோதின் கேள்விகள் எக்கச்சக்கம்.
குழந்தைகளை மறைக்கின்ற காலப்பிடியில்
சில வேளை அவள் மலடியென்றும்
தன்னை அறிமுகம் செய்கிறாள்.
அவளா இவள்
அவள்தானெனில் அர்த்தங்களுண்டு.
No comments:
Post a Comment