.

Thursday, 6 November 2014

சிவந்த கரை ----பொன்-காந்தன்






நந்திக்கடல்
எந்த திசை
அங்கே சிவந்தது அடிவானம்

கடலின் அலை
சிவந்த கரை
அங்கே முடிந்தது தொடுவானம்

அழகு மலை
சரிந்த இடம்
அங்கே விடிந்தால் அது போதும்

வளரும் தளிர்
வறண்ட துயர்
அங்கே முகில்கள் மழை துாறும்

உறவின் இழை
அறுந்த வலி
அங்கே இதயம் வரம் கேட்கும்

No comments:

Post a Comment

Ş