.

Thursday, 6 November 2014

சிதைவு ----பொன்-காந்தன்







வாழ்க்கையே
அங்கங்கு ஒட்டிவிட்டதுபோலாயிற்று
எப்பொழுது உரியும் கிழியும் என்றோர் அந்தரம்.
அவசரமாய் ஒரு புத்தகத்தை
வாசிக்கவேண்டிய பரபரப்பு
யாரோ பறித்து கிழத்துவிடக்கூடும்
அதில் யாரோ  கிறுக்கிவிடக்கூடுமோஎன்ற கணங்கள்.
என்னையே யாரோ பார்த்துக்கொண்டிருப்பதுபோல
நெளிந்து குனிந்து வளைந்து நடக்கும் அருவருப்பு.
சொருகியும் குறுக்கும் மறுக்குமாயும்தான்
அறிமுகமாகிறார்கள் பலர்.
அழாமல் என்னால் இருக்கமுடியவில்லை என்னால்.

No comments:

Post a Comment

Ş