ஊடல் கலைய
உன்னருகில் வந்தேன்.
எப்படி பேச்சை
தொடங்குவதென்று தெரியாமல்
பல முறை திரும்பதிரும்ப
அதைஎடுப்பதும்
இதை வைப்பதும்
இருமுவதும் செருமுவதுமாய்
ஏதேதோ
உன்னை தொட்டுவிடும் துாரத்தில் நடந்துவிட...
எதேச்சையாய் நீ திரும்பும்போது
உன் மேனி உரசிவிட
இழுத்தணைத்துக்கொண்டேன் உன்னை.
இடிந்தழுதுவிட்டாய் நீ
வாழ்வின் சூட்சுமத்தை
கண்டுபிடித்த களிப்பில்
என் கண்ணிலும் நீர்த்துளிகள்.....

No comments:
Post a Comment