வாரப்படாத தலையும்
சண்டிக்கட்டும்
எண்ணெய் வடியும் முகமும்
பொத்தான்கள் அறுந்த
நுால் கிளம்பிய சேட்டும்
ஓரிரண்டு குண்டுகளுமாய் நின்ற
புரட்சி தந்த புல்லரிப்பும்
எதிர்பார்ப்பும்
இறுதி நாட்களில்
சீருடையும் கொடியும் துப்பாக்கியும்
அணிவகுப்பும் சல்யூட்டுமாய்
நின்ற போதும்
அச்சமும் நம்பிக்கையின்மையும்
அருவருப்புமாயிருந்தது.
அப்போது
புரட்சி முடிந்துரொம்பகாலமாயிற்றென்று
மக்கள் பேசிக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment