உனதெண்ணப்படி வாசல் தெரு
நீ மகிழும்படி
பூஞ்சிசெடி நிழல் மரங்கள்
பூட்டும் திறப்பும் உன்கையில்
எவனோ வருகிறார்
எவனோ போகிறார்
கோடியில் இருந்த
பழைய புளிய மரமும் வைரவரும்
உன் கண்ணில் படாத அதிஸ்டத்தில்
உன் நகரத்தில்
நகரத்தில் நான் தரித்திருக்கின்றேன்.
No comments:
Post a Comment