பொன்-காந்தன்
குண்டுபட்ட காயங்களில்
வெள்ளை புறாவை பச்சை குத்து.
எமது வெள்ளை இதயத்தில் துடிக்கும் ஓசையை
துருவம் வரை ஆலய மணியாக்கு.
நறுமணம் நிரம்பிய குகைகளில்
நாம் வாழ்ந்ததை உணர
மிருகங்களை கடந்து வரட்டும் மனிதன்.
இருள் பூத்த கண்ணர்களுக்கு
வசந்தம் இருந்ததைசொல்ல
தென்னங்கீற்றை ஜன்னலாக்கிக்காட்டு.
கடலோரம் மண் தின்னும் இதயக்கூடுகளின்
எலும்புகள் பொறுக்கி எடுத்து
காதல் ஜோடிசெய்.
வேரை பிடித்து காட்டு
இது எங்களுடைய உலகமும் தான்
எங்களுக்காய் மட்டும் இருந்திருக்கலாம்.
அதனால்
வேரின்பாடலை மூச்சு முட்டப்பாடு.
No comments:
Post a Comment