.

Tuesday, 21 January 2014

கவிதை- பொன்.காந்தன்




அச்சம்



மழைவருமென குடை வாங்க தெரிந்தது.
பருவம் பார்த்து பயிர் செய்ய முடிந்தது
தவறவிடப்பட்ட மளிகைப்பொருட்களை
மீண்டும் கேட்டுவாங்க தெரிந்தது.
மோட்டார் வண்டியின் எரிபொருளையும் காற்றையும்
சீர்பார்க்கும் கவனம் இருந்தது
பதவிகளை பெற ஆகக்கூடியதாய்
எல்லா முயற்சிகளும் எடுக்க தெரிந்தது.
உன் உடையை வேறொருவன் உருவி எடுக்கிறான்
நீ எதுவும் செய்யவில்லை.
ராஜதந்திரமென்று

சொல்லிவிடுவாயோ என்று அச்சப்படுகிறேன்.

No comments:

Post a Comment

Ş