.

Thursday, 5 December 2013

அந்த இடம் - 2013 தை கார்த்திகைவரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை








அந்த மனிதரை காணவில்லை

அவருக்கான அழைப்பு

எல்லோரிடமும் இருப்பதாக  உணர்கிறேன்.

அவர் இங்கே

அடுத்த கணமே வேண்டப்படுகிறார்.





என் மீது சுமத்தப்படும்

எல்லா இம்சைகளின்போதும்

நான் அம்மனிதரை தேடுகிறேன்.

அவரிருந்த இடம்

எவருக்குமில்லாமல் இருக்கின்றது.





அநேகம் பேர்

அநேக சந்தர்ப்பங்களில்

அவரை தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.




(2013தை - கார்த்திகை வரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை)

 -பொன்.காந்தன்-  

No comments:

Post a Comment

Ş