பொன்-காந்தன்
மலாவின் புத்தகங்கைளை
எமக்கும் அனுப்புங்கள்
துப்பாக்கிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
பர்தா அணிந்த பறவையின் கனவில் உயிர்க்கட்டும்
மண்மூடிப்போன நம் குழந்தைகள்.
பக்கங்களின் ஸ்பரிசங்களில்
இனிவரும் யுகங்களுக்கு
மலாலாவின் பனிப்புற்களின் மேல்
வெள்ளை இரவுகள் படர
படையெடுப்புகள் பாவங்களை கழுவிக்கொள்ளட்டும்.
மறக்காமல் மலாலாவின் புத்தகங்களைஅனுப்பிவையுங்கள்.
புத்தகங்களுக்கு மட்டும்
காவலிருக்கட்டும் மொத்த துப்பாக்கிகளும்.
குழந்தைகளின் மிட்டாசாய்
இந்த உலகத்தை
எத்தனை நாளைக்கு பறித்தும் ஒழித்தும் வைத்திருப்பது.
மலாலா--பெண்களின் கல்விக்காக போராடும் இசுலாமிய சிறுமி
தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவள்.2013 செப்ரெம்பரில்
ஜ.நா.சபையில் உரையாற்றினாள்
No comments:
Post a Comment